Friday, May 11, 2012

எனக்கு பிடித்த வரிகள் 03...

குற்றத்தை ஒப்புக் கொண்டாலே
பாதி மன்னிப்பு கிடைத்து விடும்


இளமை தவறான பலவற்றை நம்புகிறது
முதுமை சரியான பலவற்றை சந்தேகிக்கிறது


கொடுத்து வாழ வேண்டும்
கெடுத்து வாழ கூடாது


சகோதரர்களாக இருங்கள்
ஆனால் எப்பொழுதும் கணக்கு வைத்துக் கொள்ளுங்கள்


வாழ்க்கையை வகுத்துக் கொள்
இல்லாவிட்டால் வாழ்க்கை அர்த்தமின்றி கழிந்து விடும்


உங்களுக்காக பொய் சொல்பவன்
உங்களுக்கு எதிராகவும் பொய் சொல்வான்


பணிவு என்பது தாழ்மையின் சின்னமல்ல
உயர்ந்த பண்பின் அறிகுறி


எந்த முடிவும் எடுக்கவில்லை என்பது ஒரு முடிவுதான்
ஆனால் தவறான முடிவு


மனிதன் சிரிப்பது மற்றவர்களைப் பார்த்து
அவன் அழுவது தன்னைப் பார்த்து


வாக்குறுதி ஒரு நிலவு போன்றது
உடனே நிறைவேற்று அல்லது தேயும்


ஏமாற்றுவது கெட்டிக்காரத்தனமல்ல
பெரும் நம்பிக்கை துரோகம்


காலம் நல்லதெனில் கூட்டும் இனிக்கும்
காலம் கெட்டதெனில் அதுவும் கசக்கும்


இதயம் ரோஜா மலராக இருந்தால்
பேச்சில் அதன் நறுமணம் தெரியும்


நண்பனின் மறைவைத் தங்கிக் கொள்ளலாம்
ஆனால் நட்பின் மறைவைத் தாங்கிக் கொள்ள முடியாது


ஆயிரம் முறை சிந்தியுங்கள்
ஆனால் ஒரேயொரு முறை முடிவு எடுங்கள்


நம்பிக்கையாளர் மறதிக்குச் சிரிக்கிறான்
அவநம்பிக்கையாளன் சிரிப்பதற்கு மறக்கிறான்


துன்பத்தை அனுபவித்த காலத்தை மறந்துவிடு
ஆனால் அது கற்றுத் தந்த பாடத்தை மறக்காதே


அழகோடு அகங்காரமும் கூடி நின்றால்
அந்த அகங்காரமே அழகை அழித்துவிடும்


விதியைத் தங்குவதுதான் அதை
வெற்றி கொள்ளும் வழி


உலகில் நிரந்தரமானவை எதுவும் இல்லை
துன்பம் மட்டும் என்ன விதிவிலக்க?


சோதனையை சாதனையக்கினால்
வெற்றியின் எல்லையை அடையலாம்

எனக்கு பிடித்த வரிகள்02 ...விரோதி உன் குறைகளை பிறரிடம் சொல்வான்
நண்பன் உன்னிடம் சொல்வான்


தோல்விகளைக் கண்டு நீ பயந்தால்
வெற்றி உன்னைக் கண்டு பயப்படும்


அன்பு செலுத்துதல் ஆணுக்கு அழகு
புரிந்து கொள்ளுதல் பெண்ணுக்கு அழகு


இன்பத்தைப் பங்கு போட்டால் இரட்டிப்பாகும்
துன்பத்தை பங்கு போட்டால் பாதியாகும்


கல்வியின் வேர்கள் கசப்பானவை
ஆனால் கனிகள் இனிப்பானவை


பிறர் எதைச் சொன்னாலும் கேட்டுக்கொள்
உனக்கு சரி எனத் தெரிவதைச் செய்


உங்ககளது வேலையை நேசியுங்கள்
வாழ்க்கையையும் யோசிங்கள்


வென்ற பிறகும் சமாதானம் பேசுபவனே
உண்மையான வீரனாகிறான்
பிரிவு உறவை வளர்க்கும்
ஆனால் அடிக்கடி பிரிவது கசக்கும்


உன் பொறாமையால் மற்றவர்கள் தாழ்வதில்லை
நீதான் தாழ்வாய்


எழும்போது தாங்க வருகின்றவனெல்லாம்
விழும் போது தூக்க வருவதில்லை


பணம் பேச ஆரம்பிக்கும் போது
உண்மை ஊமையாகிவிடும்


எதிரியை வெல்வதைவிட
அவனைப் புரிந்து கொள்வதே மேல்


நாம் நம் செயல்களால் வாழ்கிறோம்
ஆண்டுகளால் அல்ல


உங்கள் மனம் பிழை என்று சொல்வதை
ஒருபோதும் செய்யாதீர்கள்


ஏமாற்றிப் பெறுகின்ற எல்லாம்
பெற்றவரையே ஏமாற்றிப் போய்விடும்


முடியும் என்று நினை
முடிவு என்று நினைக்காதே


விரும்பிப் போனால் விலகிப் போகும்
விலகிப் போனால் விரும்பி வரும்


பிறருக்கு உதவி செய்ய எப்போதும்
தயாராக இருங்கள்


எந்த நிலைக்கு உயர்ந்தாலும்
வந்த நிலையை மறவாதே


நல்ல நடத்தையை இழந்தால் மீண்டும்
அதைப் பெறுவது கடினம்


கொடுத்து வாழ வேண்டும்
கெடுத்து வாழக்கூடாது