Tuesday, July 21, 2009

எனக்கு பிடித்த வரிகள்


* உன் பேனாவைக்
கூட மூடிவைக்காதே
அதை திறக்கும்
வினாடிகளில் கூட
நீ எழுத
நினைத்ததை
மறந்துவிடக் கூடும்

* நீ போகும்
பாதையில்
எவ்வித தடங்கலும்
இல்லையென்றால்
அது உன் பாதை அல்ல....
யாரோ கடந்து போன பாதை...

* உனது
முடிவு
என்பது
முடிவெடுத்தபின்
உன்னை கவலைப்பட
வைக்காததா இருக்க
வேண்டும்

* அழகை பார்த்தே
முதல் காதல் வருகிறது
அழகிடம் தோற்றுப்போயே
உண்மைக் காதல் வருகிறது

* என்
இறந்த காலம்
என்ற கண்ணாடியே
நிகழ்காலத்தில்
நான் தடுமாறாமல்
நடக்க உதவி செய்கிறது

* கருகிப்
போவதற்கு சருகல்ல நான் !
கலியுகத்திலும் வாழும் புதுமை பெண்

* அன்பை
உண்மையாக
நீ
எதிர்பார்த்து நின்றால்
உனக்காக அன்பும்
காத்துக் கொண்டிருக்கும்

* புரியாத
நட்புக்கு
அருகில்
இருந்தாலும்
பயனில்லை
புரிந்த நட்புக்கு
பிரிவு ஒரு தூரமில்லை .....

* கடந்த
காலம்
நமக்கு பாடமாக
இருக்கவேண்டுமே ஒழிய,
பாரமாக இருக்க நாம்
அனுமதிக்கக்கூடாது

* நாம்
சிலரை வெறுப்பதற்குக்
காரணம் அவர்களைச் சரியாக
புரிந்து கொள்ளாததுதான்.
அவர்களைச் சரியாகப் புரிந்து
கொள்ளாததற்குக் காரணம் நாம் அவர்களை
வெறுப்பதுதான்.


*இந்த உலகத்தில்
நீ யாரையும் நேசிக்கலாம்.
உன்னை நேசிக்காதவரையும் நீ நேசிக்கலாம்.
ஆனால் நீ நேசிக்க மறந்தாலும் என்நேரமும் உன்னைமட்டுமே
நேசிப்பவள் உன்னை மட்டுமே யோசிப்பவள் உன் அன்னையே.

* சோகம் என்னும்
பறவைகள் உங்கள் தலைக்கு
மேல் பறப்பதை உங்களால் தடுக்க இயலாது.
ஆனால், அவை உங்கள் தலையிலே
கூடுகட்டி வாழ்வதை
உங்களால் தடுக்க இயலும்.......

* உன்
பகைவனுக்கு மன்னிப்பை பரிசளி .....
உன் நட்புக்கு உள்ளத்தை பரிசளி..........
உனக்கு நீயே தன்னம்பிக்கை பரிசளி................

* காதல் என்பது
ஓவியம் போன்றது
வரைய தெரிந்தவன் புத்திசாலி
வரைய தெரியாதவன் அதிஷ்டசாலி......

* பொறுமையால்
எதையும் சாதித்து விட முடியும்.
தண்ணீரைக் கூட
கையில் எடுத்துச் செல்ல முடியும்.
அது உறையும் வரை காத்திருந்தால்...!!

* கவலை
சுமந்து கண்ணீர்
சிந்துவதை விட
லட்ச்சியங்களை
சுமந்து ரத்தம் சிந்தலாம்...

* நீ வெளிச்சத்தில்
சென்றால் உலகமே
உன்னை பின் தொடரும்....
ஆனால் நீ இருட்டில் சென்றால்
உன் நிழல் கூட உன்னை பின் தொடராது ......

* பார்த்தவைகள்
எல்லாம் பிடிப்பதில்லை
ஆனாலும் பிடித்தவைகள்
எல்லாம் எமக்கு கிடைப்பதில்லை........


* என் கண்கள்
காட்டிக் கொடுத்த
உண்மைகளை விட
என் காதுகள்
கேட்ட
பொய்களே
அதிகம்


* மனிதனின் விதி அவனுடைய
தலையெழுத்தில்
இல்லை அவனுடைய
மனவலிமையில் தான் இருக்கிறது

* நாம் சிந்தனையிலும் புத்தகத்திலும்
பெண் என்பவள் தெய்வம் ஆனால்
நடைமுறையிலோ
அவள் ஒரு அடிமை வீட்டில்
வளர்க்கப்படும் பிராணி.

* கலங்கிய நீருக்கும் எடை அதிகம்
சுத்தமான நீருக்கு எடை குறைவு
உன் உள்ளம் சுத்தம் இருந்த்தால் தான்
பாவங்கள் குறையும்.

* தேவைகள் குறையக்குறைய
நிம்மதி கூடும்.

* மருந்துச்செடிக்கும் நோய் வரும்
ஒரு மருந்தவனுக்கும் நோய் வரும்
பிறப்பு,இறப்பு எல்லோர்க்கும்
உண்டு.

* உலகம் கசப்பான உண்மையை விரும்புவதில்லை,
இனிய கனவுகளே அதற்கு வேண்டும்.


* தேடிப் பெற வேண்டியது புகழ்
நாடி வர வேண்டியது மரியாதை.


* வார்த்தையை விட மனதில்
இருக்கும் மரியாதைக்கு
மதிப்பு அதிகம்.


* பீரங்கிகுண்டுகளுக்கு முன்
மனிதன் அசையாமல் நிற்கவும் கூடும்,
ஆனால் அன்பு கனிந்த சொற்களின் முன்
அவன் பின்னடையந்தன் வேண்டியிருக்கிறது.


* மனிதர்களுக்கு எந்தப் பொருளின்
மதிப்பும் அது இல்லாத போது தன் தெரியும்.


* தாயின் மனம் எவனிடம் இருக்கிறதே,
தாயின் பொறுமை எவனிடம் இருக்கிறதே,
அவன் தான் உண்மையான சீர்திருத்தக்காரன்.


* பகிர்த்து கொள்ளும் போது
மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது.


* ஆர்ப்பாட்டம் இல்லாத பக்தியே ஆண்டவன்
கவனத்தை ஈர்க்கும்.


* தன் துன்பத்திலும் பிறர் நலனை
நினைப்பவரே நல்லோர்.


* உங்களுடைய குறிக்கோளை
அடையும் வரை தீ போல்
சுடும் துன்பங்களை
ஏற்றுக் கொள்ளுங்கள்.


* கடலில் ஒரு தரம்
முழ்கியதில் உனக்கு
முத்துக்கள் அகப்படாது போனால்
அக் கடலில் முத்துக்கள்
இல்லை என்று தீர்மானித்து விடாதே.


* நிறை குடம் ததும்பி ஒலிப்பதில்லை அது போல்
கடவுளையறிந்தவன் அதிகம் பேசுவதில்லை.


* அடுத்தவன் பாதையைப் பின்பற்றாதே
ஏனெனில் அது அவனுடைய பாதை
உன்னுடைய பாதையை கண்டுபிடி.


* இந்த உடம்பை இப்ப ஒருவன்
தூக்கி கொண்டு அலைகிறான்
அவன் வெளியேறி விட்டால் இதோ
உடம்பை நான்கு பேர் தூக்க வேண்டும்.

* அழிக்கு முன்னானது அகந்தை,
வீழ்ச்சிக்கு முன்னானது பெருமை.


* நியாயமான விமர்சனங்களுக்கு பதில்
சொல்ல வேண்டியது உங்க கடமை
அதே சமயம் அநியாயமாகக் குற்றம்
சாட்கிறவர்களுக்கு மெளனத்தையே
பதிலாக தாருங்கள்.


* உழைப்புக்கேற்ற வாய்ப்பு
ஆற்றலுக்கேற்ற வேலைக் கேற்ற
கூலி இதுவே சோஹலியம்.


* ஏழ்மை.வறுமை நிலையில்
எளிமையாக இருப்பது தியாகம்
கிடையாது வசதி இருக்கும்
போது எளிமையாக இருப்பது தான்
தியாகம்.


* கோபதாபம் மனிதர்களுக்கு
மட்டுமல்ல இசைக்கும் உண்டு.


* புகழ் தான் நம்மைத்
தோடி வர வேண்டும்
நாம் அதைப் அதைப்
தேடிப் போகக் கூடாது.


* வந்த வழியை நாம்
மறந்து விட்டால்
போகும் வழி நமக்கு
புரியாமல் போய் விடும்.


* கணவன் மனைவி இருவர்
இதயமும் அன்பு நிறைந்திருக்க வேண்டும்
இது பண்பாட்டினால் தான்
விளையுமே தவிர பணத்தால் அல்ல.


* எந்தச் சமயத்தில்
எதைச் செய்ய வேண்டுமோ
அதை செய்யத் தயங்கக் கூடாது.


* அன்பு செலுத்தாதவன்
அன்பி செலுத்தப் படுவதற்கு
அருகதையற்றவன்.


* நல்லதை செய்வதாக
இருந்தாலும் நிதானித்து தான்
செய்ய வேண்டும்.


* பெண்களிடமும் அடிமைகளிடமும்
கருணையோடு நடந்து கொள்ள வேண்டும்.

* நம் தவறுகளிருந்து நாம் கற்றுக் கொள்ளும்
பாடமே உயர்வான வாழ்க்கைக்கு
நம்மை இட்டுச் செல்லும்.

* பகைவர்கள் உங்களிடம்
அகப்படுவர்களானால்
அவரிடம் இரக்கத்துடன்
நடந்து கொள்ளுங்கள்.


* தேல்விகளுக்கிடையே தான்
வெற்றி இருக்கிறது
குழப்பங்களுக்கிடையே தான்
நம்பிக்கை இருக்கிறது
பிரச்சினைகளுக்கிடையேதான்
சாத்தியம் இருக்கிறது.


* தன் நாட்டின் முன்னேற்றூத்துக்காக
உழைக்காத ஒருவன் பிணத்துக்கு சமமாவன்.


* கலங்காத உள்ளம் படைத்தவர்களே
கடைசியில் மகத்தான வெற்றிக்கு
உரியவர்கள் ஆகிறார்கள்.

* நீ இறக்கும்போது உனக்காக அழக்கூடியவர்களை
உன் உயிருள்ளபோதே தேடி வைத்துக்கொள்.


* ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான்
என்பது பெருமையல்ல
விழுந்தபோதெல்லாம் எழுந்தான்
என்பதுதான் பெருமை.


* தீய செயல் குறித்து தெய்வத்தின் முன்னால் வெட்கப்படாதே
மனிதன் முன்பாக வெட்கப்படு அப்பொழுதே
உனக்கு விமோசம் ஆரம்பம்.

* மறக்க வேண்டியவைகளை மறக்காமல் நினைத்திருப்பதும்
மறக்க வேண்டாதவகைகளை மறந்துவிடுவதும்தான்
இந்த உலகத்தின் இன்றைய துன்பங்களுக்கு காரணம்.

*உன் அனுமதிஇல்லாமல்
உன்னை
தொடுவேன் .
உன்
கண்ணீரை
துடைக்க மட்டும்.


*பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது
பணம் இல்லாவிட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.

* கணவன் குடித்தால் பாதி வீடு எரியும்
மனைவி குடித்தால் முழு வீடும் எரிந்து கொண்டிருக்கும்.

* நாக்கு கொடிய மிருகம் ஒருமுறை அவிழ்த்து விட்டால்
கட்டுவது கடினம்தீய செயல் குறித்து தெய்வத்தின் முன்னால் வெட்கப்படாதே
மனிதன் முன்பாக வெட்கப்படு
அப்பொழுதே உனக்கு விமோசனம் ஆரம்பம்.

* யாருடைய குறைகளை எண்ணிவிட முடியுமோ
அவரே உண்மையில் உயர்ந்த மனிதர்.

* காதல் என்பது பெரிதும் இல்லைகாதலிப்பது அது புதிதும் இல்லை
காதலின் பிரிவின் வலி அது சிறிதும் இல்லை
கண்ணீர் தான் காதல் தோல்வியின் முடிவும் இல்லை.

* மணிக்கணக்கில் உபதேசம் செய்வதைவிட
ஒரு கணப்பொழுதாயினும் உதவி செய்வது மேல்.

* அருகில் இருக்கும்போது கோபுரங்கள்கூட உயரமாகத் தெரிவதில்லை
தூரத்தில் இருக்கும்போதே பிரமாண்டமாகத் தெரிகின்றன.


* புதிய நண்பர்கள் அனைவரும் கவிதை போலபழைய நண்பர்கள் அனைவரும் அரிச்சுவடி போல
பழைய நண்பர்களை ஒருபோதும் மறக்காதே
ஏனெனில் கவிதை படிக்க அரிச்சுவடி தெரிந்து இருக்க வேண்டும்.


* மனிதனின் இயற்கையான குணம் சிறப்பாகச் சிந்திப்பது ஆனால் முட்டாள்தனமாக செயற்படுவது.

* மனித முயற்சியால் எவ்வளவு முடியுமோ
அவ்வளவும் செய்து பார்
ஒவ்வொரு தடவையும் உனக்குத் தோன்றுவது
கடவுள் இருக்கிறான் என்பதே.

* ஒரு ஏழையின் வறுமை கவிதை...

எதிர் வீட்டு ஜன்னலை பார்த்தேன் நிறைய சட்டைகள்
ஏன் சட்டையை பார்த்தேன் நிறைய ஜன்னல்கள்.

* வெளிச்சத்திலிருந்து இருட்டுக்கு வந்தால் கண் தெரிவதில்லை
இருட்டிலேயே வந்தால் கண் நன்றாகத் தெரிகிறது
துன்பத்திலே வாழ்பவனுக்குத்தான் அறிவு பல வகையில் வேலை செய்கிறது.

* பணமும், பதவியும் மோசமானவையென்று ஞானிகள் ஏன் சொல்கிறார்கள்
அவை வரக் கூடாதவனுக்கு வருவதால்
கிடைக்கக் கூடாதவனுக்குக் கிடைப்பதால்.

* எவரிடமும் எதையும் எதிர்பார்க்காதீர்கள்எதிர்பார்த்தால் இறுதிவரை
எதையும் சாதிக்காமலே போய் விடுவீர்கள்.

* தெய்வ பக்தியுள்ளவன் வாழ்க்கையில் அஞ்சுகிறான்
ஆனால் மரணத்தைக் கண்டு அஞ்சுவதில்லை
நாத்திகன் வாழ்க்கையைக் கண்டு அஞ்சுவதில்லை
ஆனால் மரணத்தைக் கண்டு அஞ்சுகிறான்.

* தாய் பசித்திருக்கத் தாரத்திற்கு சோறூட்டாதே நாளை
நீ பசித்திருக்க உன் பிள்ளையும் அதே தவறைச் செய்து கொண்டிருப்பான்.

* மூச்சு நின்றால் மட்டும் மரணம் இல்லை
உன்னுடைய முயற்சி நின்றாலும் மரணம் தான்.

* எந்த நினைவு உன்னை அதிகமாக துன்புறுத்துகிறதோ
அதற்குப் பெயர்தான் பசுமையான நினைவு.

* காலை நேரம் எப்படித் தோன்றுகிறதோ
மாலை நேரமும் அப்படியே தோன்றுகிறது
விடியும் பொழுதிற்கும், முடியும் பொழுதிற்கும் தோற்றத்தில் வேறுபாடில்லை
இன்ப துன்பங்களையும் அப்படியே நினைத்துவிடு
எந்தக் கட்டத்திலும் நீ அழவேண்டிய அவசியமிருக்காது.

* எல்லா மனிதர்களையும் நம்பிவிடுவது ஆபத்து
ஒருவரையும் நம்பாமல் இருப்பது பேராபத்து.

* நீ தைரியமான மனிதன் உன்னால் சாதிக்க முடியும்
இதற்கு மேல் ஒருவரை வாழ்த்த வேறு வாசகம் தேவையில்லை.

* முட்டாளைச் சமாளிக்கச் சுருக்கமான வழி மௌனமாக இருப்பதுதான்.

* அடிக்கடி தவறு செய்கிறவன் அப்பாவி
ஒரே தவறைத் திரும்பத் திரும்பச் செய்கிறவன் மூடன்
ஒரு தவறுமே செய்யாதவன் மரக்கட்டை
தன்னையறியாமல் தவறு செய்து
தன்னையறிந்து திருத்திக் கொள்கிறவனே மனிதன்.

* நாலுநாளே பழகியிருந்தாலும் நல்லவன் நல்லதைச் செய்வான்
நாற்பது வருடம் பழகியிருந்தாலும் கெட்டவன் கெட்டதையே செய்வான்.

* நம் எதிர்காலத்தை நாமே உருவாக்குகிறோம் அதை விதி என்கிறோம்.

* உலகை அறிந்தவன் வெட்கப்படமாட்டான்
தன்னை அறிந்தவன் அகம்பாவம் அடையமாட்டான்.

* பூமியை ஆழமாகத் தோண்டினால்தான் தண்ணீர் கிடைக்கிறது
உண்மையான அன்பு வைப்பவனுக்குத்தான் நன்றி நிரம்பவருகிறது.

* ஒருவன் அரசனாக வாழலாம்
ஆனால் அவன் மனிதனாகத்தான் மரிக்கவேண்டும்.

* படுக்கச்செல்வதற்கு முன்பாக கவலைகள் அனைத்தையும்
செருப்போடு கழற்றி வைக்கவேண்டும்.

* அறிவு அடக்கம் அஞ்சாமை கொடுக்கும் குணம் உங்களிடம் இருக்குமானால்உங்களுக்கு வேண்டாதவர்கள் இந்த உலகில் இல்லை.

* இறைவன் மனிதர்களுக்குச் சிறிதும் அநீதி இழைப்பதில்லைஆனால் மனிதர்கள்தான் தங்களுக்குத் தாங்களே அநீதி இழைத்துக் கொள்கிறார்கள்.

* என்றும் நினைவில் கொள்
மனிதனாகப் பிறந்தவன் பயனின்றி அழியக்கூடாது.

* வாழ்க்கையில் காணப்படும் துன்பங்களைக் கண்டு பயந்து அவற்றைப் பொல்லாதவை என்று மதிப்பிடுபவர்கள் வெறும் கோழைகளே.

* வாழ்க்கையில் பெரிதும் எதிர்பாராதவையே நடக்கின்றன
இப்படி இல்லா விட்டால் வாழ்க்கைக்குப் பயனோ பொருளோ இருக்காது.

* யோசிப்பதானால் நிதானமாக யோசியுங்கள்
செயல்படுவதானால் உறுதியுடன் செயல்படுங்கள்
விட்டுக் கொடுப்பதனால் பெருந்தன்மையுடன் விட்டுக் கொடுங்கள்
எதிர்ப்பதனால் துணிந்து எதிர்த்து நில்லுங்கள்.

* கடுமையான கஞ்சத்தனம்தகுதியற்ற தற்பெருமை
எல்லையற்ற பேராசை
இந்தமூன்றும் மனிதனை நாசமாக்கிவிடும்.

* தங்கள் கால்களால் பறவை சிக்கிக் கொள்ளும்தன் நாவினால் மனிதன் சிக்கிக் கொள்வான்.

* உதவும் கரங்கள்ஜெபிக்கும் உதடுகளைவிடச் சிறந்தது.

* நட்பு என்பதும் நம்பிக்கைகற்பு என்பதும் நம்பிக்கை
முயற்சி என்பதும் நம்பிக்கை
நாம் மூச்சு விடுவதும் நம்பிக்கை.

* பெண்களை ஆண்கள் காவல் புரிவதால் பெண்மை தாழ்ந்ததன்றுவன்மை இரும்புப்பெட்டி மென்மை தங்கத்தை காப்பாற்றுகிறது
தங்கம் தாழ்ந்ததென உலகம் கருதுகிறதா?.

* நீ சொல்லப் போகும் வார்த்தை மௌனத்தை விட சிறந்ததென்று
திடமாக தெரியும்வரை வாயைத் திறவாதே.
* உன‌க்கு ஒரே ந‌ண்ப‌ன் ‌நீயே
ஒரே பகைவனு‌ம் ‌நீயே
உ‌ன்னை‌த் த‌விர பகைவனு‌ம் இ‌ல்லை ந‌ண்பனு‌ம் இ‌ல்லை.

* ம‌கி‌ழ்‌ச்‌சி எ‌ன்ற உண‌ர்‌ச்‌சி ம‌ட்டு‌ம் இ‌ல்லா‌‌வி‌ட்டா‌ல்
வா‌ழ்‌க்கை எ‌ன்பது சும‌க்க முடியாத பெ‌ரிய சுமையா‌கி‌யிரு‌க்கு‌ம்.

* பத்து அறிவாளிகள் பேசிக் கொண்டிருக்கும் போது
நீ மௌனமாக இரு
நிச்சயமாக நீதான் பதினோராவது அறிவாளி.

* அதிகம் பேசுபவர்கள் எல்லாம் அறிவாளிகள் அல்ல
அறவே பேசாதிருப்பவர்கள் முட்டாள்களுமல்ல
அளவோடு பேசு, அதிகம் மௌனம் சாதிக்காதே.

* தோல்வியின் அடையாளம் தயக்கம்வெற்றியின் அடையாளம் துணிச்சல்
துணிந்தவர் தோற்றதில்லை
தயங்கியவர் வென்றதில்லை...

* காதலிக்கலாமா என்று சிந்திப்பவர்கள்சன்யாசம் வாங்கிக் கொள்ளலாமா என்று யோசிப்பவர்கள்
தற்கொலை செய்து கொள்ளலாமா என்று ஆராய்பவர்கள்
எல்லாரும் ஒரே ரகம். நினைப்போடு சரி.

* நீர் அமைதியாக இருப்பதால் முதலைகள் இல்லையென்று நினைத்து விடாதே.

* எங்கே விழுந்தாயென பார்க்காதே எங்கே வழுக்கினாயென பார்.

* நீ சொல்வதை வேண்டுமானால் சந்தேகப்படுவார்கள்
ஆனால் நீ செய்வதை மக்கள் நம்பித்தான் ஆகவேண்டும்.

* யாருக்காவது குழிதோண்டப் போகிறாயா
இரண்டாகத் தோண்டு. உனக்கும் சேர்த்து.

* மகிழ்ச்சியாய் நீ வீணாக்கிய தருணங்களெல்லாம் வீணானவையல்ல.

* அப்பன் எத்தனை உயரமாயிருந்தாலென்ன நீ உயர நீ தான் வளரவேண்டும்.

* ஒரு மலரையோ, ஒரு பட்டுப் பூச்சியையோஅதன் தோற்றத்தைக் கொண்டு மதிப்பிட்டு விடலாம்
ஆனால் மனிதப்பிறவியை அவ்வாறு மதிப்பிட இயலாது

* உனக்கு நிறைய தெரிந்திருந்தாலும்
உன் தொப்பியிடமும் யோசனை கேள்.

* ரகசியத்தை வெளிப்படுத்தியவனுக்கும்
துக்கத்தை வெளிப்படுத்தாதவனுக்கும் மனதில் நிம்மதி இருக்காது.

* நம் புத்திக்கு எட்டாத வழிகள் நான்குண்டு.
1.வானத்திலே கழுகினுடைய வழி,
2.பாறைகளின் மேலே பாம்பினுடைய வழி,
3.நடுக்கடலிலே கப்பலினுடைய வழி,
4.ஒரு பெண்ணை காதலித்த மனுஷனுடைய வழி.


* சந்தத்தை நம்பி கவிதை இருக்கலாம்
தந்தத்தை நம்பி யானைஇருக்கலாம்
சொந்தத்தை நம்பி நீ இருக்காதே
பந்தத்தை நம்பி மதிப்பை இழக்காதே.


* துன்பமும் வேதனையும் என உலகம்
ஆனாலும்.
பூக்கள் மலரும்.


* விட்டுக் கொடுங்கள் விருப்பங்கள் நிறைவேறும்
தட்டிக் கொடுங்கள் தவறுகள் குறையும்
மனம் விட்டுப் பேசுங்கள் அன்பு பெருகும்.


* மரம் சும்மா இருந்தாலும் காற்று அதை சும்மா இருக்கவிடுவதில்லை.


* நண்பனே!
நாளைய மழை அறியும் எறும்பாய் இரு
நேற்றைய மழைக்கு இன்று குடை பிடிக்கும்
காளானாய் இராதே.


* தோழர்களே
பயணம் போவோம்
நாட்களை நம்பியல்ல
நம்மிரு தோள்களை நம்பி.


* பத்துவயதில் பெண் தேவகன்னியாக இருப்பால்
பதினைந்தில் கள்ளமற்ற முனிவரைப் போல இருப்பாள்
நாற்பதில் சைத்தானாவாள், எண்பதில் சூனியக்காரியாவாள்

* பெண்களுக்கு இரண்டுமுறை பைத்தியம் பிடிக்கும்
அவள் காதல் கொண்ட சமயம்,தலை நரைக்கத் தொடங்கும் சமயம்

* ஆண்கள் இதயங்களால் சிரிப்பார்கள்
பெண்கள் உதடுகளால் சிரிப்பார்கள்

* நாக்கு தான் பெண்ணிற்கு வாள் அது ஒருபோதும் துருப்பிடிப்பதில்லை

* ஆண்கள் யாருமே இல்லையென்றால் பெண்கள் அனைவரும் கற்புக்கரசிகள் தான்

* மணவாழ்க்கையைப் புகழ்ந்து பேசு,ஆனால் நீ எப்போதும் தனித்திரு

* உன் இதயம் ரோஜாமலராயிருந்தால் பேச்சில் அதன் வாசனை தெரியும்

* முதல் தவறு இரண்டாவது தவறுக்கு இருக்கையைத் தயார் செய்கிறது

* சோம்பேறித்தனம் தான் அடிக்கடி பொறுமை என்ற பெயரில் தவறாகக் கணிக்கப்படுகிறது

* சல்லடையில் கூட தண்ணீரை எடுத்துச் செல்வான் புத்திசாலி

* எழுத்துச் சிரங்கு ஒருவனுக்குப்பிடித்துவிட்டால் அவனை ஒன்றுமே செய்யமுடியாது
அவன் பேனாவால் சொறிந்து கொண்டேயிருப்பான்

* உரலில் தலையைவிட்டபிறகு உலக்கைக்கு அஞ்சக் கூடாது

* சொந்த ஊரில் ஒருவன் பெயருக்கு மதிப்பு
அயலூரில் அவன் சட்டைக்குத் தான் மதிப்பு

* மகிழ்ச்சியை விலைகொடுத்து வாங்க முடியுமானால் அந்த விலையைப் பற்றியும்
நாம் கண்ணீர்விட்டுக் கொண்டிருப்போம்

* எந்தப் பழக்கத்தையும் ஜன்னல் வழியாகத் தூக்கி எறிந்துவிடமுடியாது
கையைப் பிடித்து படிப்படியாக இறங்கி அழைத்துப் போய்தான் வெளியேற்றவேண்டும்

* இரத்தத்தில் கையை நனைப்பவன் , கண்ணீரால் தான் அதைக் கழுவவேண்டும்

* உனது ஒவ்வொரு தவறும் உன் எதிரியை உத்தமனாக்கிவிடும்

* நம்பிக்கையுள்ளவர்களுக்கு கதவுகள் மூடிக்கொண்டாலும்

ஜன்னல்கள் வழிகாட்டும்

* ஒரு எலும்புக்காக நேர்மையான மனிதன் தன்னை நாயாக்கிக் கொள்ளமாட்டான்

* அகம்பாவம் ஒரு பொல்லாத குதிரை , ஒருமுறையாவது தன் மேல் சவாரி செய்யும்
எஜமானனை கீழே தள்ளாமல் விடாது

* அவசரமாக கல்யாணம் செய்து கொண்டால் மெதுவாக உட்கார்ந்து கொண்டுதான் அழுவாய்

* காகம் உனக்கு வழிகாட்டினால் அது செத்த நாய்களிடம் உன்னைக் கொண்டு சேர்க்கும்

* ஓநாய்கள் வாழும் இடத்தில் பறவைகள் பட்டினி கிடப்பதில்லை

* செவிடன் இருமுறை சிரிப்பான்

* ஒருவன் தன் கோடாரியை விழுங்கப்போவதாகச் சொன்னால் நீ அதன் காம்பைப்
பிடித்துக்கொண்டு அவனுக்கு உதவி செய்

* ஒரு பெண்ணையும் காதலிக்காதவன் பன்றியிடம் பால் குடித்திருப்பான்

* பொண்டாட்டியை அடிப்பவன் அவளுக்கு மூன்று நாட்கள் ஓய்வுகொடுத்துத்
தானும் மூன்று நாள் பட்டினியாயிருப்பான்

* குழந்தை “ஏன்?” என்று கேட்பதுதான் தத்துவ ஞானத்தின் திறவுகோல்

* அழகுக்காகத் திருமணம் செய்து கொள்பவன் இரவு நேரங்களில் இன்பமாகவும்
பகல்நேரங்களில் துக்கமாகவும் இருப்பான்

* குட்டையான பெண்ணை மணந்து கொண்டால் துணி அதிகம் தேவையிராது.

*அவசரக்காதல் சீக்கிரம் சூடாகி சீக்கிரம் குளிர்ந்து விடும்

* ஒருத்திமீது காதல் வந்துவிட்டால் அவள் அம்மைத் தழும்புகளும்
அதிர்ஷ்டக் குறிகளாகத் தெரியும்

* தூக்கம் வந்துவிட்டால் தலையணை தேவையில்லை,
காதல் வந்துவிட்டால் அழகு தேவையில்லை

* கடவுள் பாவங்களை மன்னிக்கிறார்,இல்லாவிடில் சுவர்க்கம் காலியாகவே இருக்கும்

* மனிதன் ஆண்டவனிடம் செல்ல நொண்டுகிறான் , சாத்தானிடம்
செல்லத் துள்ளி ஓடுகிறான்

* வயிறு நிறைந்துள்ள போதும் உண்பவன் தன் பற்களாலேயே தனக்குச் சவக்குழி
தோண்டிக்கொள்கிறான்

* இரவல் வாங்கிய உடை வாடை தாங்காது

* உடுத்திவரும் பட்டுப்பூச்சி அரிப்பதில்லை

* ஒன்பது வியாபாரம் செய்பவனுக்கு தரித்திரத்தைச் சேர்த்துப் பத்தாகும்

* மஞ்சள் துண்டைக் கண்ட சுண்டெலி மளிகைக்கடை வைத்ததாம் ..

* உறங்குகின்ற ஓநாயின் வாயில் ஆடுகள் சென்று விழுவதில்லை

* நீ குடும்பத்தின் தலைவனாக இருக்கவேண்டுமானால் உன்னை
மூடனாகவும் செவிடனாகவும் காட்டிக் கொள்ளவேண்டும்

* பிச்சைக்காரனுக்குக் கோபம் வந்தால் அவன் வயிறு தான் காயும்

* மூன்று முறை முகத்தில் அடித்தால் புத்தருக்கும் கோபம் வரும்

* மனிதரில் நாவிதனும் , பறவைகளில் காகமும் வாயாடிகள்

* தற்புகழ்ச்சியின் வாடையை யாராலும் தாங்கமுடியாது

* பழமொழியில் உமி கிடையாது

* கெட்டிக்காரன் தன் நற்பண்புகளை உள்ளே மறைத்து வைத்துக் கொள்கிறான்
மூடன் அவைகளைத் தன் நாவிலே தொங்கவிட்டுக் கொள்கிறான்

* சேற்றிலுள்ள புள்ளும் , வேட்டைநாயின் பல்லும் , மூடனுடைய சொல்லும்
அதிகமாய்க் குத்தும்

* உலோபியிடம் யாசித்தல் கடலில் அகழிவெட்டுவது போன்றதாகும்

* ஜாருக்கு ஜலதோஷம் வந்தால் ரஷ்யா முழுவதும் தும்மும்

* ஒரு பையிலுள்ள அரிவாள் , பூட்சுக்குள் இருக்கும் துரும்பு, சாளரத்தின்
அடியிலுள்ள பெண் – இவைகள் தாம் இருப்பதை அடிக்கடி அறிவுறுத்திக்
கொண்டே இருக்கும்

* மரத்திலே பானை செய்தால் ஒரு முறைதான் சமைக்க முடியும்

* தாய்வார்த்தை கேளாப்பிள்ளை நாய்வாய்ச் சீலை

* குழந்தையின் வயிற்றுக்குக் கண் இல்லை

* ஆந்தையும் தன் மகனை ராஜாளி என்றே கொஞ்சும்

* ஐந்து பெண்குழந்தைகள் உள்ள குடும்பத்திற்குத் திருடன் வேறு தேவையில்லை

* மனைவியும் பாயும் வந்தபுதிதில் சிறப்பாக இருக்கும்

* ஊமை மனைவி கணவனிடம் அடிபடுவதே இல்லை

* திருமணம் என்ற கோணியில் தொண்ணூற்றொன்பது பாம்புகளும்
ஒரு விலாங்கும் இருக்கும்

* கடவுள் ஒருவனைத் தண்டிக்க விரும்பினால் அவனுக்குத் திருமணம்
பற்றிய நினைப்பை உண்டாக்குவார்

* பெண்பிள்ளை விவாகத்திற்கு முன்னாள் அழுவாள்
ஆண்பிள்ளை விவாகத்திற்கு பின்னால் அழுவான்

* காபியும் காதலும் சூடாக இருக்கும் வரை தான் ருசியாக இருக்கும்

* பெண்ணின் யோசனையால் பலனில்லை என்றாலும்
அதை ஏற்றுக் கொள்ளாதவன் பாடு அவலம்தான்

* கூரை ஏறிக் கோழி பிடிக்கமுடியாத குருக்கள்
வானத்தைக் கீறி வைகுண்டத்தைக் காட்டுவாரா

* சோத்துல கெடக்குற கல்லை எடுக்காதவன்
சேத்திலே கெடக்குற எருமையத் தூக்குவானா ?

* உள்ளூரிலே ஓணான் பிடிக்காதவன்
உடையார் பா¨ளாயத்துல போயி உடும்பு பிடிப்பானா ?

* சுருக்கம் விழுந்த கழுத்தில் முத்துமாலை அழுது கொண்டே தொங்கும்

* பழைய இஞ்சியில் காரம் அதிகம்

* உலகத்திற்கே தெரியவேண்டிய விஷயத்தை உன் மனைவியிடம் மட்டும் சொல் ,அது போதும்

* பொண்டாட்டி என்றால் புடவை துணிமணிகள் என்று அர்த்தம்

* மனைவிக்குச் சீலைகள் வாங்கிக் கொடுத்தால் , கணவனுக்கு அமைதி கிடைக்கும்

* சமையல் மோசமானால் ஒரு நாள் நஷ்டம் அறுவடை மோசமானால் ஒரு வருடம் நஷ்டம்
விவாகம் மோசமானால் ஆயுள் முழுவது நஷ்டம்

* தூக்கில் தொங்குவதும் மனைவி வாய்ப்பதும் விதியின் பயன்

* போதகர்களுக்குள் சண்டை வந்துவிட்டால் சைத்தானுக்குக் கொண்டாட்டம்
* தாடி பேன்களை உண்டாக்குமேயொழிய அறிவை உண்டாக்காது

* மனிதனின் குற்றங்களில் பெரும்பாலானவை 
அவனது நாவிலிருந்துதான் பிறக்கின்றன.

* தன்னை அதிக புத்திசாலியாக எண்ணுவதே 
மனிதனிடம் உள்ள மிகப் பெரிய பலவீனம்.

* உண்மையான செல்வாக்கை நாம் தேடிக் கொள்ளக் கூடாது. அது நம்மைத் தொடர்ந்து வரவேண்டும்.

* நம்முடன் வாழ்வோரைப் புரிந்து கொள்வதற்கு நம்மை நாமே முதற்கண் புரிந்து கொள்வது அவசியம்.

* எவன் பிறர் நற்செயல்களைப் பார்த்து மகிழ்ச்சி கொள்ளவில்லையோ,அவனால் நல்ல

செயல்கள் எதையும் செய்ய முடியாது.

*மகிழ்ச்சி என்ற உணர்ச்சி இல்லாவிட்டால் 
வாழ்க்கை சுமக்க முடியாத பெரிய சுமையாகிவிடும்.

* இல்லறத்தாருக்கும் துறவறத்தாருக்கும் பிரம்மச்சாரியம் அவசியம். ஏனெனில் உடல் மீதான ஆசை ஒழிந்தாலன்றி ஆத்மானந்தம் கிடையாது.

* மின்மினிப் பூச்சி எவ்வளவு ஒளியுடன் திகழ்ந்தாலும் அது தீ ஆகாது.

* நம்பிக்கை குறையும் போது ஒவ்வொரு மனிதனும் நெறியற்ற கொள்கையைமேற்கொள்கிறான்.

* உண்மையான நட்பு ஆரோக்கியம் போன்றது.
அதனை இழக்கும் வரை அதன் மதிப்பை நாம்உணர்வதில்லை.

* அவசரமாகத் தவறு செய்வதை விட தாமதமாகச் சரிவர செய்வது மேல்.

* ஒரு மனிதனுக்கு அளிக்கக்கூடிய கடுமையான தண்டனை அவனால் புரிந்துகொள்ள இயலாத காரியத்தை, கட்டாயப்படுத்திச் செய்யச் சொல்வதுதான்.
* எவனால் சிரிக்க முடிகிறதோ அவனால் கட்டாயம் ஏழையாக இருக்க முடியாது.

* உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்.

* மறக்க வேண்டியவைகளை நினைத்து வருந்துவதும், நினைக்க வேண்டியவைகளை மறந்து விடுவதும்தான் இந்த உலகத்தில் தற்போது இருந்துவரும் துன்பங்கள் அனைத்திற்கும் காரணம்


உன் வாழ்க்கையின் எந்த ஒரு நாளில் உன் முன்னால் எந்தப் பிரச்சினையையும் நீ சந்திக்காமல் முன் செல்கிறாயோ, அப்பொழுது தவறான பாதையில் நீ பயணிக்கிறாய் என்று அறிவாய்.

* வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெற மூன்று வழிகள்

1. பிறரைக்காட்டிலும் அதிகமாக அறிந்து கொள்ள முயலுங்கள்.
2. பிறரைக்காட்டிலும் அதிகமாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்
3. பிறரைக் காட்டிலும் குறைவாக பிறரிடமிருந்து பெற முயலுங்கள்.

* நீ வெற்றி பெற்றால், நீ பிறருக்கு நின்றுகொண்டு விளக்கத் தேவையில்லை. நீ தோற்றால் நீ அங்கு நின்று உன் தோல்விற்கான காரணங்களை விளக்கிக் கொண்டிருக்கக் கூடாது.

* இந்த உலகத்தில் வேறு எவருடனும் நீ உன்னை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டாம். அவ்வாறு நீ செய்தால் நீ உன்னை அவமதித்துக் கொள்வதாகப் பொருள்.

* இந்த உலகில் நாம் நம் கண் முன்னால் காணும் ஒவ்வொருவரையும் நேசிக்க இயலவில்லை என்றால் கண்ணுக்குத் தென்படாத கடவுளிடம் எவ்வாறு அன்பை செலுத்த இயலும்.

* நீ பிறரின் குணாதிசயங்களைக் கணிக்கத் துவங்கினால் அவர் பால் அன்பு செலுத்த நேரம் இருக்காது.

* வெற்றி என்பது ஒவ்வொரு முறையும் முதல் இடத்தைப் பெறுவது என்று பொருள் அன்று. வெற்றி பெற்றாய் என்றால் உன் செயல்பாடு சென்ற முறையை விட இம்முறை சிறப்பாக அமைந்துள்ளது என்று பொருள்.

* ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

* எவராவது தான் தன்னுடைய வாழ்நாளில் ஒரு பிழையும் செய்ததில்லை என்று நினைத்தால் அவர்கள் தாம் தம் வாழ்வில் புதிய முயற்சிகளை செய்து பார்த்ததில்லை என்று பொருள்.

* ஒரு பொழுதும் வாழ்க்கையில் நம்பிக்கை, வாக்கு, சுற்றம், இதயம் இந்த நான்கையும் முறித்துக் கொள்ள முயலாதீர்கள். ஏனெனில் அவைகளனைத்தும் உடையும் பொழுது ஒலி எழுப்பாது போனாலும் பெரும் வலியை ஏற்படுத்தும்.PAKEE Creation