Saturday, October 26, 2013

ஜாக்கிசான்...

இப்போது உலகம் வன்முறைக்களமாக மாறிவிட்டது
உண்மையில் எனக்கு வன்முறை சுத்தமாகப் பிடிக்காது
அதனால் தான் என் படங்களில் சண்டைக்காட்சிகளைக் கூட நகைச்சுவையாக வைத்திருப்பேன்...

கண்ணீர்...

வெள்ளை நிற மனிதனின்
கண்ணீரும்
கருப்பு நிற மனிதனின் கண்ணீரும்
உப்பு தான்
இரண்டு கண்ணீருக்கும்
நிற வேறுபாடு இருந்ததில்லை...

வாழ்க்கை...

வாழ்க்கை என்பது சிலருக்கு வியாபாரம்
பலருக்கு அதுவே ஒரு போராட்டம்...

மனிதன்...

வசதி படைச்சவன் தர மாட்டான்
அவனை
வயிறு பசிச்சவன் விட மாட்டான்
வானத்தை வில்லா வளைச்சுக் காட்டுறேன்னு
வாயாலே சொல்லுவான் செய்ய மாட்டான்...

வாழ்வு...

ஜனனம் தாய் தகப்பன் கொடுப்பது 
மரணம் இறைவன் அழைப்பது
இரண்டுக்கும் இடைப்பட்ட வாழ்வு 
நடிப்பு...

சுவாமி விவேகானந்தர்....

மரணம் என்ற ஒன்று இருக்கின்ற வரையில்
நீ விரும்புகின்ற ஒன்று நடக்காத வரையில்
விரும்பாத ஒன்று நடக்கின்ற வரையில்
ஈஸ்வரன் என்பவன்
நீ விரும்புகிறாயோ இல்லையோ
இருந்து கொண்டே இருப்பான்...

துன்பம்...

துன்பம் என்பது 
எந்த இடத்திலயும் 
யாருக்கும் வந்தே தீரக்கூடிய ஒன்று...

விளைவு...

வாழ்க்கையில் நாமெல்லாம்
விரும்பி பிறந்தவங்க இல்லை
யாரோ இரண்டு பேர்
சந்தோசமாக இருந்தார்கள்
அதனுடைய விளைவு
நாம் இங்கே பிறந்தோம்

ஒரு தாய் தகப்பனுடைய
சந்தோசத்திற்கு தண்டனை நாம்...

உடம்பு...

நிலை இல்லாத இந்த உடம்பின் மீது
எவ்வளவு மோகம்
எவ்வளவு வருணனை...

சீட்டு விளையாட்டு...

அன்றாட நிகழ்ச்சிகளெல்லாம்
இறைவன் கலைத்துப் போடும்
சீட்டு விளையாட்டுக்கள்
அந்த விளையாட்டில்
சிலர் ஜெயிக்கிறார்கள்
சிலர் தோற்று போகிறார்கள்...

சுவாமி விவேகானந்தர்...

உலகிலே மரணம் என்பது இருக்கும் வரையும்
மனித இதயத்திலே பலவீனம் இருக்கும் வரையும்
அந்த பலவீனத்திலே
மனிதனுடைய இதயத்திலிருந்து அழுகுரல் வரும் வரையில்
ஆண்டவனிடத்தில் நம்பிக்கை இருந்தே தீரும்...

மகன்...

மகனை அளவில்லாமல்
உண்ண வைத்து அழகு பார்த்தவள் தாய்
வயோதிக காலத்தில்
அவள் உண்ண அழகு பார்க்க வேண்டியவன் மகன்...

வாழ்க்கை...

ஒன்றில் நின்று கொண்டே
இன்னொன்றை நோக்கிக் ஓடிக்கொண்டிருக்கும்
பொய்யான வாழ்க்கையிலேயே
மனித வாழ்க்கை ஓடிக்கொண்டு இருக்கிறது...

ஒவ்வொருவன்...

ஒவ்வொருவன் கண்ணுக்கும்
அடுத்தவன் சந்தோஷமாக
இருப்பது போலவே தோன்றுகிறது...

கவலை...

கவலை என்பது ஒரு வலை
தனக்கு தானே அதை
வீசி கொள்கிறவர்கள் உண்டு
வலைக்குத் தப்பிய மீன்கள்
நீர் வற்றி விட்டால்
மரணத்துக்கு தப்புவதில்லை...