Thursday, July 5, 2012

எனக்கு பிடித்த வரிகள் 04...

நம்பிக்கை இழந்து மதம் மாறுபவன்
நம்பி வந்தவளை மாற்ற மாட்டானா?


அழகால் ஆணவம் கொண்ட எவரும்
ஆன்ம பலத்தின் முன்னே அழித்து போவர்


மனிதக் கணக்கில் வாழ்வு பெரிது
காலக்கணக்கில் வாழ்நாள் சிறிது


உங்கள் வாழ்வின் எல்லையைத் தீர்மானிப்பது
அடுத்தவன் வசதியில்ல உங்கள் நிலைமை


மனிதரை மனிதர் சரிநிகர்
சமமாய் மதிப்பது நம் கடமை


பெண்பாவம் மாத்திரமல்ல
ஆண்பாவமும் பொல்லாததுதான்


தமிழின் மேன்மை அதன் தொன்மையில் அல்ல
தொடர்ச்சியிலேயே உள்ளது


எந்த நிலைக்கு உயர்ந்தாலும்
வந்த நிலையை மறவாதே


கோபம் அன்பை அழிக்கின்றது
செருக்கு அடக்கத்தை அழிக்கின்றது


சிந்தனை செய்வது வளர்ச்சியைத் தரும்
கவலைப்படுவது அழிவைத் தரும்


தனக்குத்தானே கட்டுப்பாடு விதித்துக்கொண்டு
வாழ்பவனே சுதத்திர மனிதன்


அறிவை விட தைரியத்தினால் பெரிய
காரியங்கள் சாதிக்கப்படுகின்றன


வாழ்க்கையை வகுத்துக் கொள்
இல்லையெனில் வாழ்க்கை அர்த்தமின்றி கழித்து விடும்


தைரியம் , புத்தி , நுண்ணறிவு இவை மூன்றும்
ஒருவருக்கு நல்ல நண்பர்கள்


துருப்பிடித்து அழிவதை விட
பயன்படுத்தி தேயச் செய்வதே புத்திசாலித்தனம்


உங்களுக்கு உதவி தேவையா?
அதை உங்களிடம் கேட்டு பெறுங்கள்


உனது விடுதலைக்கு வழி பிறரிடம் இல்லை
அது உன்னிடம் தான் உள்ளது


நெருக்கடியின் போது நிதானத்தை கடைபிடிப்பது
மிகப் பெரிய பலம்


நல்லோரைக் காண்பது நல்லது
அவரோடு இணைத்து வாழ்தல் அதனினும் நன்று


உண்மையிலே தேவைப்படும்போது தான்
எந்த பொருளையும் கேட்க
 வேண்டும்


எதுவும் எப்போதும் உங்களால் செய்ய முடியும்
என்றே நினையுங்கள்


உன்னை அடக்குபவர் முன் சுதத்திரமாய் இரு
சுதத்திரம் தருபவர் முன் அடங்கிவிடு


நாடு நலம் பெற வீட்டுக்கு
ஒரு புத்தக சாலை வேண்டும்


எங்கு அன்பு இருக்கிறதோ அங்குதான்
பயனுள்ள வாழ்க்கை இருக்க முடியும்


யாரையும் யாராலும் திருத்த முடியாது
அதனால் நீ முதலில் உன்னை திருத்து


முயற்சி செய்யாதவனுக்கு
கடவுள் கூட உதவி செய்யமாட்டார்


வெறும் அறிவுரை மட்டும் சொல்லிக்கொண்டு இராதீர்கள்
நடந்து காட்டுங்கள்


தைரியம் மிகுத்தவர்களை
அதிஷ்டம் பின் தொடர்கிறது


பேச்சு பெரிதுதான்
ஆனால் மௌனம் அதினினும் பெரிது


அமைதியாய் இரு
நீ எவரையும் வசப்படுத்திக் கொள்ள முடியும்


வாழ்வும் தாழ்வும் நாம் செய்யும்
காரியங்களாலேயே உண்டாகின்றன


உலகிலேயே துயரம் நிறைத்த மனிதன்
எதிலும் தயக்கம் காட்டுபவன் தான்


கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் தாமதப்படுத்தங்கள்
அதுவே உண்மையான வீரம்


நீங்கள் உங்களை உயர்த்திக் கொள்ள விரும்பினால்
வேறு ஒருவரை உயர்த்துங்கள்


உற்சாகமும் , உல்லாசமும் தைரியமும்
நோய் தீர்க்கும் மருந்துக்கள்


உண்மையை நேசி , ஆனால் பிழையை மன்னித்து விடு
நீ உயர்ந்த மனிதனாகி விடுவாய்


பேசியபிறகு வருந்துவதை விட
பேசுவதற்கு முன் யோசனை செய்வது மிகவும் நல்லது


அளவில்லாத வேதனைகளைத் தாங்கிக்கொண்டு
சாதனை படைக்கிறவன் தான் மேதை


நல்லவனாக இருக்கலாம்
ஆனால் மௌனியாக இருக்க கூடாது


இலட்சியமில்லாத மனிதன் திசை காட்டும்
கருவி இல்லாத கப்பலுக்கு ஒப்பாவான்


தவறு செய்து விட்டோம் என்று தெரிந்தும்
அதை ஒப்புக்கொள்ள வெட்கப்படாதே


துன்பத்துக்கோ கோபத்துக்கோ இடங்கோடுப்பவர்கள்
அடிமைப்பட்டு விடுகின்றனர்


எரிகின்ற விளக்காய் இரு
அப்போது தான் மற்ற விளக்குகளை எட்டி வைக்கலாம்


ஒருபோதும் போராடாமலே இருப்பதைவிட
போராடித் தோற்பதே மேல்


மகிழ்ச்சியோடு சுமந்தால்
எந்தப் பாரமும் குறைவாயிருக்கும்



நாம் எதை இழந்து விட்டாலும் கௌரவத்தை
மட்டும் இழக்க இடம் தரக் கூடாது


அனுபவம் என்பது மனிதர்கள் தாங்கள்
புரிந்த தவறுகளுக்கு இட்ட பெயராகும்


பொற்றோர்களின் வாழ்க்கையென்பது
குழந்தைகளின் பாடப்புத்தகமாக அமைகிறது


தன்னை தானே வெற்றி கொண்டவனுக்குத்தான்
சந்தோசம் கிட்டும்


வைராக்கியமான உள்ளம் கொண்டோர்
என்றும் மரணத்திற்கு அஞ்ச மாட்டார்கள்


தாழ்வு மனப்பான்மை பயனற்றது மட்டும் அல்ல
பல துன்பங்களையும் கொடுப்பது


அடிக்கடி கோபம் கொள்கிறவன் விரைவில்
முதுமை அடைகிறான்


உங்களுடைய அனுமதி இல்லாமல்
உங்களை யாரும் தாழ்வாக நடத்த முடியாது


கற்பனை செய்யத் தெரியாதவன்
சிறகுகள் இல்லாத பறவையைப் போன்றவன்


திருப்தியின்மை , ஏக்கம் ஆகிய இரண்டும்
வளர்ச்சிக்கு அவசியமானவை


நற்செயல் மேலானது
அதனினும் மேலானது நல்லெண்ணம்


அறிவு காட்டும் வழியில் செல்லாதே
ஆன்மா கட்டும் வழியில் மட்டுமே செல்


அறிவை விட தைரியத்தினால் பெரிய
காரியங்கள் சாதிக்கப்படுகின்றன


உன்னை தாழ்த்திப் பேசும் போது நீ அடக்கமாய் இருந்தால்
பெரிய சாதனையாகும்


மரணம் என்பதுகடன்
அந்த கடனை எல்லோரும் கொடுத்து தான் ஆக வேண்டும்


சுய நம்பிக்கை இல்லாதவனை
யாரும் மதிக்க மாட்டார்கள்


நேரம் என்பது செலுத்தப்பட்ட அம்பைப் போன்றது
அது திரும்பி வராது


பொறமை , பேராசை , கோபம் , கடுஞ்சொல்
இவை நான்கும் உன் விரோதிகள்


ஒருவன் சிரிக்கும் போதெல்லாம்
மரணம் தள்ளிபோடப்படுகிறது


எங்கு அன்பு இருக்கிறதோ
அங்குதான் பயனுள்ள வாழ்க்கை இருக்க முடியும்


பிரார்த்தனைகளை விட மிகவும் உயர்ந்தது
பொறுமை தான்


நெருக்கடியின் போது
நிதானத்தை கடைபிடிப்பது மிகப் பெரிய பலம்


கோபம் அன்பை அழிக்கின்றது
செருக்கு அடக்கத்தை அழிக்கின்றது


முட்டாசி கானல் நீர் அல்ல
அது வெற்றி என்கிற ஜீவா நதிக்கு அழைத்துச் செல்லும்


ஆசையும் ஏக்கமும் செல்வத்தைச் சேர்க்காது
உழைப்பே செல்வத்தைத் தரும்


நகைச்சுவை உணர்வு உள்ளவர்கள்
அன்பு உள்ளவர்களாக இருப்பார்

1 comment:

சாதாரணமானவள் said...

என்னங்க.... கொட்டி இருக்கீங்க...