Wednesday, March 19, 2014

முடியும்...

யாராவது ஒரு வேலையை 
உங்களால் செய்ய முடியுமா 
என்று கேட்டால் முடியும் என்று சொல்லிவிட்டு 
அதை
எப்படி செய்வது என்பதை யோசியுங்கள்...

காதல்...

ஒரு கையைப் பிடிப்பதற்காக மூளையைத்
தொலைக்கும் செயலே காதல்...

அகம்பாவம்...

திறமை என்பது கடவுளால் கொடுக்கப்பட்டது.
அடக்கத்துடன் இருங்கள்.
புகழ் என்பது மனிதரால் கொடுக்கப்பட்டது
நன்றியுடன் இருங்கள்
அகம்பாவம் என்பது நமக்கு நாமே கொடுத்துக் கொள்வது
எச்சரிக்கையுடன் இருங்கள்...

வெற்றி...

ஒரு தோல்வியிலிருந்து இன்னொரு
தோல்விக்கு உற்சாகம்
குறையாமல் செல்வதே வெற்றி...

Saturday, October 26, 2013

ஜாக்கிசான்...

இப்போது உலகம் வன்முறைக்களமாக மாறிவிட்டது
உண்மையில் எனக்கு வன்முறை சுத்தமாகப் பிடிக்காது
அதனால் தான் என் படங்களில் சண்டைக்காட்சிகளைக் கூட நகைச்சுவையாக வைத்திருப்பேன்...

கண்ணீர்...

வெள்ளை நிற மனிதனின்
கண்ணீரும்
கருப்பு நிற மனிதனின் கண்ணீரும்
உப்பு தான்
இரண்டு கண்ணீருக்கும்
நிற வேறுபாடு இருந்ததில்லை...

வாழ்க்கை...

வாழ்க்கை என்பது சிலருக்கு வியாபாரம்
பலருக்கு அதுவே ஒரு போராட்டம்...