Saturday, October 26, 2013

மனிதன்...

வசதி படைச்சவன் தர மாட்டான்
அவனை
வயிறு பசிச்சவன் விட மாட்டான்
வானத்தை வில்லா வளைச்சுக் காட்டுறேன்னு
வாயாலே சொல்லுவான் செய்ய மாட்டான்...

வாழ்வு...

ஜனனம் தாய் தகப்பன் கொடுப்பது 
மரணம் இறைவன் அழைப்பது
இரண்டுக்கும் இடைப்பட்ட வாழ்வு 
நடிப்பு...

சுவாமி விவேகானந்தர்....

மரணம் என்ற ஒன்று இருக்கின்ற வரையில்
நீ விரும்புகின்ற ஒன்று நடக்காத வரையில்
விரும்பாத ஒன்று நடக்கின்ற வரையில்
ஈஸ்வரன் என்பவன்
நீ விரும்புகிறாயோ இல்லையோ
இருந்து கொண்டே இருப்பான்...

துன்பம்...

துன்பம் என்பது 
எந்த இடத்திலயும் 
யாருக்கும் வந்தே தீரக்கூடிய ஒன்று...

விளைவு...

வாழ்க்கையில் நாமெல்லாம்
விரும்பி பிறந்தவங்க இல்லை
யாரோ இரண்டு பேர்
சந்தோசமாக இருந்தார்கள்
அதனுடைய விளைவு
நாம் இங்கே பிறந்தோம்

ஒரு தாய் தகப்பனுடைய
சந்தோசத்திற்கு தண்டனை நாம்...

உடம்பு...

நிலை இல்லாத இந்த உடம்பின் மீது
எவ்வளவு மோகம்
எவ்வளவு வருணனை...

சீட்டு விளையாட்டு...

அன்றாட நிகழ்ச்சிகளெல்லாம்
இறைவன் கலைத்துப் போடும்
சீட்டு விளையாட்டுக்கள்
அந்த விளையாட்டில்
சிலர் ஜெயிக்கிறார்கள்
சிலர் தோற்று போகிறார்கள்...